Tuesday, October 13, 2009

இரண்டாவது குழந்தை படும் பாடு








முதல் குழந்தையிடம் இருந்து இரண்டாவது குழந்தையை காப்பாத்தி கொள்ளுங்கள்.




எல்லோருக்கும் கல்யாணம் ஆனதும் பிறக்கும் முதல் குழந்தையின் மேல் பாசத்தை கொட்டி சிலர் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்கின்றனர்.




சில வருடம் முன்று நான்கு வருடம் சென்றதும் அடுத்த குழந்தை பெறும் போது, முதல் குழந்தையிடம் உள்ள பாசம் குறைகிறது. நீங்கள் பாசத்தோடு தான் இருப்பீர்கள் ஆனால் குழந்தை அப்படி நினைத்து கொள்ளும்
எப்படியும் முதல் குழந்தைக்கு பொறாமை வரும். புது டிரெஸ் வாங்கினால், பால் பாட்டில் வாங்கினால் கூட பொறாமையா இருக்கும்.





இது இப்ப லேட்டஸ்டா நடந்து கொண்டு இருக்கு.




யாரும் இல்லாத போது தூளியில் படுத்திருக்கும் குழந்தை மண்டைய இடிச்சி விடுவது, போய் கடித்து வைப்பது இது போல் எல்லாம் செய்கிறார்கள்.

என்னேரமும் கண் கொத்தி பாம்பு போல் பிள்ளைகளை கவனிக்க வேண்டியதா இருக்கு இப்ப உள்ள பிள்ளைகளை.
மடியில் வைத்து கொஞ்சினால் கூட அவர்களுக்கு பிடிக்காது. ஏதாவது சாமானை தூக்கி அடிப்பார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் பொறாமையால் அவர்கள் ரொம்ப காலமாக பேசாமல் கல்யாணத்திற்கு பிறகு தான் பேசி இருக்கிறார்கள்.இதேல்லாம் கேள்வி படும் போது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.

அதே நேரம் முதல் குழந்தையையும் சரியான முறையில் ஆதரியுங்கள்.
என்ன வாங்கி கொடுப்பதாக இருந்தாலும் முதல் குழந்தைக்கும் சேர்த்து வாங்கி கொடுங்கள்.
பள்ளி செல்லும் பிள்ளையாக இருந்தால் ஒரளவிற்கு புரிந்து கொள்வார்கள் எடுத்து சொல்லுங்கள்.







இது போல் நிறைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.






7 comments:

SUFFIX said...

இது ஒரு சவாலான மேட்டர் தான் ஜலீலா, எங்களுடைய முதல் மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்கான் இடைவெளி ஐந்து வருடங்கள், அதனால் அவ்வளவு பிரச்னை இல்லை, ஆனால் மூனாவதுக்கும் நாலாவதுக்கும் ஒன்றரை வருடங்கள் தான், சமாளிக்க கொஞ்சம் கஷடப்பட்டோம், அப்புறம் சரியாகி விட்டது.

Jaleela Kamal said...

ஷ‌பிக்ஸ் , இதில் ப‌திவு போடுவ‌தில்லை
சிலருக்கு குழ‌ந்தை வ‌ள‌ர்பு ப‌குதியை தேட‌ முடியாம‌ல் எங்கே அந்த‌ ப‌திவை காணும் என்கிறார்க‌ள். ஆனால் சில‌ர் த‌னியாக‌ குழ‌ந்தை வ‌ள‌ர்பு ம‌ட்டும் பார்ப்ப‌தால் இதிலும் ப‌திவை போட்டேன்


நாங்களும் வளர்ந்தோம் நானும் வளர்த்தேன் ஆனால் இதுவரை இந்த விஷியம் இப்படி கேள்வி பட்டத்தில்லை,



ஆனால் இடை வெளி உள்ள இரு ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகளுக்கும் கூட பொறாமை இருக்கும், ஆனால் அது ந‌ம‌க்கு தெரியாது,வெளியில் உள்ள‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளிட‌ம் பேச்சு கொடுக்கும் போது தெரிய‌ வ‌ரும்.

S.A. நவாஸுதீன் said...

எங்க வீட்டிலும் இந்தப் பிரச்சனை உண்டு. மகளுக்கும் மகனுக்கும் 2 வருட வித்தியாசம்தான். சமாளிக்கத்தான் வேண்டியிருக்கிறது

Jaleela Kamal said...

நவாஸ் இத பற்றி பேசனும் என்றால் நிறைய விஷியம் இருக்கு கடந்த ஒரு மாதமா இந்த மேட்டரை வெளியிட எந்த நடையில்(கவிதை,கதை,கட்டுரை) இது எதுவும் தெரியாததால் வெளியிடுவது என்று புரியாமல், கடைசியில் என் சொந்த நடையிலேயே வெளியிட்டாச்சு.


இது எல்லா வீட்டிலும் ந‌ட‌க்குது, ஆனால் இல்லை என்று சொல்ல‌ முடியாது.



இன்னும் திருமணம் பற்றி ஒரு முக்கிய‌மான‌ விஷிய‌மும் டைப் ப‌ண்ணி வைத்தாச்சு, ஆனால் எல்லோரும் பொருமையா ப‌டிப்பார்க‌ளா என்று தான் தெரிய வில்லை இன்னும் வெளியிட‌ வில்லை.

Jaleela Kamal said...

ஆனால் இதுக்கெல்லாம் தீர்வு இல்லை என்பதில்லை குழ‌ந்தைக‌ள் வ‌ள‌ர்ந்த‌தும் அனுப‌வ‌த்தில் ஒரு ஸ்டேஜில் புரிந்து கொள்வார்க‌ள், அத‌ற்குள் அம்மா அப்பாவிற்கெல்லான் டென்ஷ‌ன், பீபி எல்லாம் ஏறிவிடும்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Jaleela Kamal said...

இங்கு வந்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ரூபன்